கொழும்பில் போராட்டம்...

 இலங்கை இராணுவத்தினருக்கு ஆதரவான பொதுமக்கள் போராட்டமொன்று இன்று (31) மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி இதனை ஏற்பாடு செய்துள்ளது.

அதன் பிரகாரம் இன்று (31) மாலை 2.30 மணியளவில் கொழும்பு,07 விஜேராம சந்தியில் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதிகள் மூவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக பிரித்தானியாவினால் அண்மையில் விதிக்கப்பட்ட பயணத் தடைக்கு எதிர்ப்பை வெளிக்காட்டு்ம் வகையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அருகில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.




No comments:

Post a Comment

Start typing and press Enter to search