கனடாவில் கைதான பாகிஸ்தான் விமான பணிப்பெண்!

 கனடாவின் ரொறொன்ரோவில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் பல்வேறு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் விமானத்தில் இருந்து வந்த ஹினா சானி என்ற விமானப் பணிப்பெண்ணின் பயணப் பையில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகள் இருந்ததைக் கண்டு ரொறன்ரோவில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர் பாகிஸ்தானில் உள்ள பிரபல இசைக்கலைஞரின் குடும்ப உறுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவருடன் இருந்த மேலும் இரு விமானப் பணிப்பெண்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



No comments:

Post a Comment

Start typing and press Enter to search