முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் - கடவுச்சீட்டை வழங்கும் நடவடிக்கையில்!
முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் விடயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் குற்றச்சாட்டு
திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலையில் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்தும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றது என சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
அத்துடன் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்கும் நடவடிக்கையில் இந்திய ஒன்றிய அரசு பின்னடித்து வருகின்றது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்
இதனால் அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத விடத்து தம்மால் கடவுச்சீட்டு வழங்கமுடியாது என்று இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக இலங்கைத் தூதரகத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல்நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்றுமுன்தினம் மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையில் பங்கேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் முருகன், ரொபேர்ட் பயஸ் மற் றும் ஜெயக்குமார் ஆகியோரை திருச்சியில் இருந்து அழைத்துச் சென்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
திருச்சி மத்திய சிறைவளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மூவரும் நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணியளவில் அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய ஒன்றிய அரசின் சாதகமான பதில் கிடைக்காத விடத்து தம்மால் கடவுச்சீட்டு வழங்கமுடியாது என்று இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment