யாழ் வெதுப்பகம் ஒன்றிற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இயங்கிய வெதுப்பகம் ஒன்று நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமற்ற முறையில் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தியமை, விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பொது சுகாதார பரிசோதகர், வெதுப்பகத்திற்கு சீல் வைக்க கட்டளையிடக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார் .

விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிமன்றம் வெதுப்பகத்தில் திருத்த வேலைகளை முடித்து , சுகாதார பரிசோதகர் அதனை உறுதிப்படுத்தும் வரையில் வெதுப்பகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது .



No comments:

Post a Comment

Start typing and press Enter to search