[சமீபத்திய செய்திகள்...][5]

Jaffna
News
Tamil News
இந்தியா
இலங்கை
யாழ்ப்பாணம்

சாந்தன் உடல் இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளது!

 உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் உடல் இன்று முற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடல் இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு சென்னை மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் உயிரிழப்பையடுத்து, அந்த வழக்கில் விடுதலையான ரொபர்ட் பயஸ் உருக்கமான ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

ஒரு மாதமாக தங்களுடன் உறவாடி பேசி உலாவிய சாந்தன், தற்போது உயிரோடு இல்லை.

32 ஆண்டு சிறை வாழ்க்கை முடிந்தது என எண்ணிய தங்களுக்கு, திருச்சி சிறப்பு ஏதிலிகள் முகாம் வாழ்க்கை கொடுஞ்சிறையாக உள்ளதாக வருத்தம் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் சாந்தன் உட்பட இரண்டு பேர் சிறப்பு முகாமில் உயிரிழந்ததாக ரொபர்ட் பயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 33 ஆண்டுகால பிரிவுக்கு பின்னர் ஒரு நாளாவது குடும்பத்துடன் சேர்ந்துவிட மாட்டோமா? என அவர் ஏங்கியுள்ளார்.

சாந்தனை போன்று அல்லாமல், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களையாவது தங்களது குடும்பத்துடன் சேர்ந்து வாழ வைப்பதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் ரொபர்ட் பயஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள அகதிகளான முஜிபுர் ரஹ்மானும் சுகந்தனும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்குள்ள வருவாய் துறை அதிகாரிகள் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், திருச்சி அகதிகள் முகாமில் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

SunTamil 'Online Radio

SunTamil News உடனுக்குடன் செய்திகளை பார்வையிட... மற்றும் SunTamil Online Radio கேளுங்கள்...

No comments:

Post a Comment

Start typing and press Enter to search