மோட்டார் சைக்கிள் திருட்டு : முல்லைத்தீவில் மூவர் கைது...


 முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு - தொட்டியடியில் கடந்த (18) திகதி மாட்டுவண்டி சவாரி நிகழ்வை பார்வையிட வந்த வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த  ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தினையடுத்து சம்பந்தப்பட்டவரினால் புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தில் நேற்றையதினம் (19) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு காவல்துறையினரின் தேடுதலில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரமந்தனாறினை சேர்ந்த மூவரினை கைது செய்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட மூவரும் 38, 27, 25 வயதுடையவர்கள் என்பதுடன் குறித்த சந்தேக நபர்கள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:

Post a Comment

Start typing and press Enter to search