வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு...

 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு...


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர்  மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது நேற்றைய தினம்(23) உயிரிழந்துள்ளார்.

குணரத்தினம் சுபீனா என்ற (25 வயது) மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலையை கற்கும் குறித்த மாணவி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே உயிரிழந்துள்ளார்.

உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment

Start typing and press Enter to search