[சமீபத்திய செய்திகள்...][5]

Jaffna
News
Tamil News
இந்தியா
இலங்கை
யாழ்ப்பாணம்

ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கவுள்ள கையடக்க தொலைபேசி விலைகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

 ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கவுள்ள கையடக்க தொலைபேசி விலைகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...


VAT வரி விலக்கு பட்டியலில் இருந்து கையடக்க தொலைபேசிகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் விலை அதிகரிப்பு காரணமாக சந்தையில் போலிப் பொருட்கள் அதிகரித்து வரி வருமானம் இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறித்த விலை அதிகரிப்பு தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனவரி 1, 2024 முதல் VAT 15% முதல் 18% ஆக ஒரே நேரத்தில் அதிகரிக்கப்படுவதால், கையடக்கத் தொலைபேசி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.

இதனால் 10,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகள் ஆபத்தில் இருக்கும் என்று கையடக்க தொலைபேசி மற்றும் பாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VAT வரி அதிகரிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக சந்தையில் போலிப் பொருட்கள் அதிகரித்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தை இழக்கும் அபாயம் காணப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



SunTamil 'Online Radio

SunTamil News உடனுக்குடன் செய்திகளை பார்வையிட... மற்றும் SunTamil Online Radio கேளுங்கள்...

No comments:

Post a Comment

Start typing and press Enter to search