வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

 வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!


வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம், பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சரியான முறைமைக்கமைய, தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றால், நாடு கடந்த பிரச்சனைகளில் தலையிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் உள்ள அடிமை முகாம்களுக்கு இலங்கையர்கள் கடத்தப்படுவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக மியான்மரில் சைபர் குற்றப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56   இலங்கையர்களை அந்தந்த முகாம்களுக்கு கடத்துவதற்கு தலைமை தாங்கிய சீன பிரஜையான பிரதான சந்தேக நபர் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 56 இலங்கையர்களுக்கு மேல் இருக்கலாம் என மியன்மாருக்கான முன்னாள் தூதுவரின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் நதுன் தாரக தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Start typing and press Enter to search