நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!


நாளை முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Start typing and press Enter to search