நிலைமை மோசமடைவதனால் நாட்டை விட்டு வெளியேறும் வருமானம் கூடியவர்கள்...

 நிலைமை மோசமடைவதனால் நாட்டை விட்டு வெளியேறும் வருமானம் கூடியவர்கள்...

வருமானம் கூடியவர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு காலமும் அரசாங்கங்கள் விட்டு வந்த தவறை தற்போது நாட்டு மக்கள் சுமக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வரி வருமானத்தை கடுமையாக அதிகரிக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

அதற்கு ஈடாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனால் மக்கள் பாரிய சுமைகளை எதிர்கொள்கிறார்கள், எதிர்கொள்ள போகிறார்கள்.

இந்த நிலையில் தான் வருமானம் கூடியவர்களும் தமக்கு வரிச்சுமை அதிகம் என்பதால் நாட்டை விட்டு வௌியேறி வருகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments:

Post a Comment

Start typing and press Enter to search